உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோன ஒரு பார்வை
முன்னுரை:
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத துன்பங்கள். நாம் கடந்த வருடத்தில் இருந்து நாம் படும் பாட்டுக்கு அளவே கிடையாது. துன்பங்களை அடுக்கி கொண்டே போகலாம் அதிலும் திடீர் திடீர் என்று ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் நம்மால் ஜீரணிக்கவே முடியாது. இப்படி பலவழிகளில் துன்பத்தில் அல்லல்படுத்திய அல்லல்படுத்தும் கொரோன என்னும் கொடியவனை பற்றி நான் பார்த்த அனுபவித்த சுவாரசியமான நினைவுகளை இந்த கட்டுரையின் மூலம் நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1. கொரோனாவின் தோற்றமும் வளர்ச்சியும்
2. கொரோனாவின் அறிகுறிகள்
3. கொரோனவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
4. கொரோனவால் ஊரு விட்டு ஊர் தாவிய நிகழ்வுகள்
5. அரசின் நடவடிக்கைகள்
6. ஊரடங்கால் ஏற்பட்ட துன்பங்கள்
7. மாணவர்களும் படிப்பும்
8. தொழிலும் வேலைகளும்
9. குடும்ப சச்சரவுகள்
10. ஆன்லைன் படிப்புகளும் பணிகளிலும் ஏற்பட்ட இடர்பாடுகள்
11. தடுப்பூசி கண்டுபிடிப்பு அதன் வளர்ச்சியும்
12. உயிரிழப்புகள்
13. முடிவுரை
கொரோனாவின் தோற்றமும் வளர்ச்சியும்
கொரோன கடந்த 2019 ஆண்டு ஆரம்பத்தில் சீனாவின் வுகான் மாகாணம் என்னும் இடத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. சீனர்களின் எதிர்மறையான பல காரியங்களை செய்யக்கூடியவர்கள் மற்றும் உணவு வகைகளில் கூட அனைத்து விதமான உயிரிகளை பிடித்து பச்சயா தின்பவர்கள் இயற்கைக்கு மாறாக நடந்துகொள்பவர்கள் என்பதால் கூட உருவாக்கிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கொரோனாவின் தாக்கம் சீனாவில் ஆரம்பத்தில் அதிகமாக உயிரிழப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஏன் பல நகரங்கள் அழிந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சீனர்கள் அனைத்தையும் மறைத்து ஊடகங்களுக்கு தவறான தகவல்களையே.
கொடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
கொரோனா குளிர்ச்சியான இடங்களில் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. வெப்பப்பிரதேசங்களில் அதிகம் இருப்பதில்லை என்று சொல்கிறார்கள். இந்த கொரோனவை சீனாக்காரர்கள் திட்டமிட்டே உலகநாடுகளில் பரப்பியதாக ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொரோனா ஒருகட்டத்தில் அசுரவளர்ச்சி அடைந்து இத்தாலி போன்ற குளிர்ச்சியான நாடுகளில் மனித உயிர்களை கொத்து கொத்தாக பறித்தன இப்படிப்பட்ட சம்பவங்கள் உலகநாடுகளை பத பதைக்க வைத்தன. மனித இனம் இந்த தலைமுறைகள் பார்க்காத அளவுக்கு கொடூரமாக இருந்தன கொரோனாவின் தாக்கம்.
கொரோனா என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது மிகவும் எளிதாக இருந்தது. நல்ல உடல் நிலை உள்ளவர்கள் கூட கொரோனா அறிகுறி இருப்பவர்களோடு நெருங்கி பழகினால் தொற்றும் என்று நிரூபிக்க பட்டது.
இந்த நோய் சளி இருமல் உடம்பு வலி காய்ச்சல் என்று ஆரம்பித்து இறுதியில் உயிரை பறித்துவிடுகிறது. கொரோனாவிற்கு மனித உடல்களில் மிகவும் பிடித்த பகுதி நுரையீரல். இப்படி கொரோனா நாளடைவில் அசுரவளர்ச்சி அடைந்தது உலக நாடுகளில்.
கொரோனாவின் அறிகுறிகள்
கொரோனா தொற்றும் ஒரு மனிதனுக்கு இருந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை பார்ப்போம். முதலில் சளி, இருமல், தொண்டைவலி, காய்ச்சல், நுகர்தலில் வாசனை இழப்பு போன்றவைகள் கொரோனாவின் அறிகுறிகள். சாதாரண சளி காய்ச்சல் என்று விட்டுவிடக்கூடாது உடனே பரிசோதிக்கவேண்டும். சாதாரணம் என்று நினைப்பதுதான் திடீர் என்று உயிரை பறித்துவிடுகிறது. அப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பது நம்மில் பலருக்கு தெரியும்.
ஒருகாலகட்டத்தில் காற்றில் கொரோனா கிருமி பரவுவதாக சொல்லப்பட்டது. ஒருவரை ஒருவர் தொடுவதால் மற்றும் கொரோனா உள்ளவர்கள் தொட்டுக்கொடுக்கும் பொருள்களை வாங்குவதால் கொரோனா பரவுவதாக சொல்லப்பட்டது. எப்படியோ கொரோனா அனைத்து உலக மக்களையும் மிரட்டி தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது.
கொரோனவை தடுக்கும் முறைகள்:
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி ஒரு மீட்டர் இருக்க வேண்டும். கூட்டம் கூடுதல் கூடாது. மேற்கண்டவற்றை மக்கள் சரிவர பின்பற்றினால் கொரோனா தாக்கம் குறையும் என்றாலும் மக்கள் கட்டுப்படவில்லை. அதனால் அரசாங்கம் ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் நம்முடைய கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது மற்றும் நம் இருப்பிடத்தை எப்பொழுதும் சுகாதாரமாக வைத்திருப்பதால் கொரோனவை கட்டுப்படுத்தலாம். கொரோனாவின் தொடக்க காலத்தில் மருந்து இல்லாததால் தடுப்பு முறைகளே முக்கியமாக பின்பற்றப்பட்டது.
கொரோனவால் ஊர்விட்டு ஊர் தாவியவர்கள்:
ஆரம்பத்தில் கொரோனா நகர்ப்புறங்களில் அதிகம் பரவி பல உயிர்கள் பலியாகி வந்ததால் பலர் உயிரை பாதுகாக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். அதற்க்கு தோதாக அரசும் ஊரடங்கு போட்டதால் அதிகமான பேர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். அப்படி ஊர் செல்வதற்கு நாம் எப்படி எல்லாம் அவஸ்தை பட்டோம் என்று எல்லாருக்கும் தெரிந்ததே. இப்படி தங்கள் சொந்த கிராமங்களுக்கு மக்கள் சென்றதால் அந்த பகுதிகளிலும் கொரோனா பரவ ஆரம்பித்தது. நகரங்களில் இருந்து வரும் மக்களோடு கிராமத்து மக்கள் கொஞ்சநாட்களுக்கு பார்க்க மாட்டார்கள் பேசமாட்டார்கள் ஒதிக்கீயே வைத்திருப்பார்கள் இப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டதை யாராலும் மறக்க முடியாது மறுக்கவும் முடியாது.
கொரோனா காலத்தில் அரசின் செயல்பாடுகள்:
இந்திய அரசு அக்க பூர்வமாக செயல்பட்டது. ஆனாலும் சிலதவறுகள் நடக்கத்தான் செய்தது. பல அரசியல்வதில் ஆட்சியில் இருந்தவர்கள் ஆதாயம் தேடத்தான் ஆசைப்பட்டார்கள். பலவழிகளில் பணம் சம்பாரித்தார்கள் இந்த துக்கமான நேரத்திலும். தமிழக அரசு தனது ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் இருந்ததால் பல நிகழ்வுகள் கண்டுகொள்ளாமல் பல தவறுகள் நடந்தன. எப்படியோ அழியவேண்டிய மனித உயிர்கள் ஒருபக்கம் அழிந்துகொண்டுதான் இருந்தது.
இப்படிப்பட்ட சூழ் நிலையிலும் அரசு சுகாதாரத்துறை ஊழியர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் இந்த துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டனர். இவர்களில் பலர் உயிரிழந்தது நம்மால் மறக்க முடியாது.
வருடம் முழுவது தொடர்ந்த ஊரடங்கு:
கொரோன கட்டுக்குள் வராததால் தொடர்ந்து போடப்பட்ட ஊராட்ங்கள் பலர் பாதிக்கப்பட்டனர். சிலர் வருமான இல்லாமல் வறுமைக்கு தள்ளப்பட்டனர். பிழைக்க வழியின்றி ஒருவேளை உணவுக்கு கூட அவஸ்தைப்பட்டனர். ஒரு கட்டத்தில் ஊரடங்கு மனிதர்களை வீடு சிறையில் வைத்து சித்திரவதை படுத்தியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் சொந்தங்கள் உயிர் பிரிந்து சென்றுகொண்டுதான் இருந்தன. இதில் என்ன கொடுமை என்றால் கொரோனவள் இறந்தவர்களை யாரும் பார்க்கமுடியாது என்பதுதான். மேலும் அவர்கள் இவ்வளவு சொந்தங்கள் இருந்தும் அனாதை பிணமாக ஏரிக்கப்பட்டதுதான் மிகவும் கொடுமை.
தொழில் மற்றும் வேலைகள்:
கொரோனவள் தொழில் இழந்தவர்கள் பலர் அதுபோல் தனியார் துறையில் பணிபுரிந்த பலர் வேலை இழந்ததும் உண்மை. பலருக்கு மீண்டும் கிடைத்தது வருமானம் சிலருக்கு இன்றும் வேலை கிடைக்கவில்லை பலர் இன்றும் சிரமப்படுகிறார்கள். இப்படி பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம் நீங்களும் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள்.
மாணவர்கள் :
மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை கொரோன அவர்கள் எதிர் காலத்தையும் கேள்விக்குறியாக்கியது. அரசாங்கம் வீட்டில் இருந்தே ஆன்லைன் படிப்பு என்று கொண்டு வந்தது. ஆனாலும் பல தனியார் பள்ளிகள் பணம் பிடுங்குவதை நிறுத்தவில்லை. அரசாங்கம் என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் தனியார் பள்ளிகள் கட்டுப்படவில்லை. இப்படி பணம் கட்ட முடியாமல் பலர் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிக்கு மாறிவிட்டார்கள் என்பதை நாம் அன்றாடம் வெளிவரும் தின பத்திரிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டோம். மாணவர்கள் கைபேசியை தொடக்கூடாது என்று சொன்ன நாம் அவர்களுக்கு கைபேசி வாங்கிக்கொடுக்கும் நிலைமை ஏற்பட்டது.
குடும்ப சாச்சரவுகள்:
அனைத்து கொடும்பங்களும் ஒன்றாக இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் வீட்டுக்குள்ளே பல பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்தன. பல குடும்பங்களில் வீட்டில் உள்ள வேலைகளை பார்ப்பதில் போட்டிபோட்டு நீ செய்ய வேண்டும் இது நான் செய்யவேண்டும் என்று ஒருவரை ஒருவர் சண்டைபோட்டனர் ஏன் பலகுடும்பக்களில் அடிதடி கைகலப்புகூட ஏற்பட்டது. பல குடும்பங்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இப்படி கொரோனா குடும்பங்களையும் விட்டுவைக்கவில்லை.
ஆன்லைன் வேலை மற்றும் படிப்பு:
பல மாணவர்களை ஆன்லைன் படிப்பு தவறான பாதிக்கு கொண்டு சென்றது. கைபேசி தொடக்கூடாது என்று சொன்ன காலம் போய் கைபேசி வாங்கிக்கொடுக்கும் நிலைமை ஏற்பட்டது. ஆனால் மாணவர்கள் அதில் படிப்பதை விட அதிகம் ஆன்லைன் விளையாட்டுக்கே பயன்படுத்தினர் பலர் அதற்கு அடிமைகளானார்கள். இப்படி ஆன்லைன் உபயோகத்தில் பல மாணவர்கள் உயிர் இழந்ததையும் நாம் பல ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம். இதுபோலவே ஆன்லைன் பணியில் ருசிகண்ட கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தங்களது ஆதாயத்துக்காக இன்றும் தொடர்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட பணி குடும்பங்களுக்கு மிகவும் தொந்தரவாகவும் மேலும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கெல்லாம் ஆண்டவன்தான் பதில் சொல்லவேண்டும்.
தடுப்பூசியும் அதன் பயன்பாடுகளும்:
2019 ஆம் ஆண்டு கொரோன அசுர வளர்ச்சி அடையும் பொழுது தடுக்க ஒரு மருந்து இல்லையே என்று வேதனைப்பட பலர். 2020 ஆண்டு தடுப்பூசி வந்த பிறகும் போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள். உலக விஞ்ஞானிகள் தங்களது அயராத உழைப்பால் பலவிதமான கண்டுபிடுப்புகளை நிரூபித்து கண்டுபிடித்துள்ளனர் தடுப்பூசியை. அரசாங்கம் ஊசி இலவசம் என்ற பிறகு கூட போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள் பலர். ஒரு பொருள் இல்லாத பொது இருந்த தவிப்பு அந்த பொருள் இருக்கும் பொழுது இல்லாமல் போனதுதான் ஆச்சரியம்.
அரசாங்கம் பலயுத்திகளை கையாண்டு கட்டாயப்படுத்தி ஓரளவு நிறைவேற்றியது ஆனாலும் இன்னும் பலர் ஊசி போடவில்லை. என்னுடைய கருத்து நாம் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டு கொரோன என்னும் கொடியவனுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது நம்மளால் மட்டுமே முடியும் நாம் மனசுவைக்கவேண்டும்.
உயிரிழப்புகள் :
2019 மற்றும் 2020 ஆண்டுகளின் இரண்டு கொரோன அலைகளிலும் நம்மை விட்டு பிரிந்த உறவுகள் எண்ணிலடங்காதவைகள். எண்ணிப்பார்க்க முடியாத பல சம்பவங்கள். நினைத்து பார்க்கமுடியாத பல நிகழ்வுகள். இந்த தாக்குதலில் பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள், என்று பாகுபாடு இல்லாமல் பல உயிர்கள் பறிக்கப்பட்டது பாரபட்சம் இன்றி உலகநாடுகளில் இறப்பு அரங்கேறிக்கொண்டிருந்தது ஒரு கட்டத்தில் பிணக்குவியல்களால் நிரம்பிவழிந்தது இந்த உலகம் யாராலும் மறுக்க முடியாது. வாழ் நாளில் யாரும் பார்த்திருக்கத்த அளவுக்கு மரணங்கள். இவற்றை ஒரு உலக யுத்தம் என்றே சொல்லலாம் உலக போரைவிட மிகவும் மோசமானது கொரோன தாக்கம். இந்த நிகழ்வுகள் சில நாட்டினரால் கெட்ட எண்ணத்தில் பரப்ப பட்டது என்று சொல்லப்படுகிறது ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை. ஆனாலும் எப்படி இருந்தாலும் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக ஆண்டவனின் பார்வையில் இருந்து தப்பவே முடியாது அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. உப்பு தின்னவன் தண்ணிகுடித்துதான் ஆகவேண்டும் தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்ற பழமொழி பொய்க்காது ஒருபோதும்.
முடிவுரை :
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்றும் மறைய வடு கொரோன தாக்கம். சில நாட்டவரின் கெட்ட எண்ணத்தால் பரப்பப்பட்டது. நம்மை விட்டு சென்ற நம் உறவுகளையே நம்மால் பாக்க முடியாமல் போன சூழ்நிலைகள் அவர்கள் அனாதை பிணங்களாக எரிக்கப்பட்ட நிகழ்வுகள் இன்றும் நம்முடைய மனதில் எரிந்து கொண்டுள்ளன நினைவுகளாக. பலர் கொரோனவால் ஏற்பட்ட வறுமையில் உயிரிழந்தவர்களும் உண்டு. இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி வரக்கூடாது என்று ஆண்டவனை வேண்டுவோம். இனிவரும் காலங்களில் இயற்கைக்கு எதிர்மாறாக நடந்துகொள்ளாமல் இருப்போம். பிரவுயிர்களுக்கு துன்பம்விளைவிக்காமல் இருப்போம். மற்றவர்களும் நம்மளை போன்றவர்கள் தான் என்று எண்ணி சுயநலம் இன்றி பொதுநலத்தோடு இருப்போம் மனிதநேயத்தை பின்பற்றுவோம். ஓன்று மட்டும் உறுதியாக சொல்லி இந்த கட்டுரையை முடிக்கிறேன் இந்த உலகத்தில் எந்த மூளையில் இருந்து நாசவேலையை செய்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக ஆண்டவனுடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது. இப்பொழுது தண்டனை கிடிக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் ஆண்டவன் தண்டனை கொடுப்பார் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அனைவரும் இதை மனதில் வைத்து வாழ்க்கையை சுகமாக மனிதநேயத்தோடு வாழ வேண்டும்.
கட்டுரை ஏழுதியவர்
முத்துக்குமரன்.பி
சென்னை-௯௫.
8428764569 .