பெண்மையின் விடியல்

நிலவோடு வாழும்
நிஜமாக நீயும்...

மனதோடு இருக்கும்
கனிவோடு நாளும்...

இனிமையாய் சிரித்தாய்
நிஜங்கள் புலப்பட...

பெண்மையின் அர்த்தங்கள்
உன்னில் வெளிப்பட...

அடிமைத்தனத்தை உடைத்தாய்
கர்வம் உடைந்திட...

பலதுறையில் கால்பதித்தாய்
வெற்றியை முத்தமிட்டாய்...

கண்இமைக்கும் நேரத்தில்
சிகரத்தை தொட்டுவிட்டாய்...

பட்டாம்பூச்சியாய் சிறகடித்தாய்
பெண்ணடிமையை துரத்திவிட்டாய்...

வியந்துபார்த்தேன் உன்னை
விடிந்துவிட்டது பெண்மை...

எழுதியவர் : பிரதீஷ் நாகேந்திரன் (2-Sep-21, 8:49 pm)
Tanglish : penmayin vidiyal
பார்வை : 156

மேலே