பிரதீஷ் நாகேந்திரன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பிரதீஷ் நாகேந்திரன்
இடம்:  குலசேகரம்,நாகர்கோயில்
பிறந்த தேதி :  10-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Aug-2021
பார்த்தவர்கள்:  90
புள்ளி:  9

என் படைப்புகள்
பிரதீஷ் நாகேந்திரன் செய்திகள்
பிரதீஷ் நாகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2022 1:55 pm

மானா மதுரை
மண மணக்கும்
மல்லிபூ மதுரை...

பக்தரை காக்க
மீனாட்சி கோவில்கொண்ட
பக்தியின் மதுரை...

சித்தமெல்லாம் நீயிருக்க
புலவர்கள் புடைசூழ
கவிப்பேரவை மதுரை...

உலகமே வியந்து
வீரத்தை போற்றுகின்ற
தமிழின மதுரை...

துள்ளி குதித்தோடும்
காளையை அடக்கிடும்
வீர மதுரை...

கோவலன் கண்ணகி
பறை சாற்றும்
அக்னி மதுரை...

அரசனும் புலவனும்
ஓன்று சேர்ந்த
புண்ணிய மதுரை...

உலகமே உற்றுநோக்கும்
அறிவு விளக்காய்
அமைந்த மதுரை...

மேலும்

பிரதீஷ் நாகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2022 6:31 pm

புதையல் தேடுகிறேன்
உந்தன் உதயத்தில்
அன்பு கிடைக்குமா
என்ற ஏக்கத்தில்....

வளையல் ஓசை
கேட்கிறது காதோரம்
கண்கள் தேடுகிறது
நீ இருக்கும்தூரம்...

பிறப்புக்கும் இறப்புக்கும்
வெகுதூரம் என்றிருந்தேன்
உன்னை கண்டதும்
நான் சரணடைந்தேன்....

பட்டாம் பூச்சியாய்
வானில் சிறகடித்தாய்
என் வாழ்க்கையே
நீதானென்று உணரவைத்தாய்....

காதல் வருவது
தெரியாது என்றனர்
உன்னை பார்த்ததும்
காதலே நீதானென்றது...

காத்திருக்கிறேன்...
காதலாய் வருவாய்யென்று....

மேலும்

பிரதீஷ் நாகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2022 8:21 pm

காதல் கனவிலே
என் ஏக்கம்
உந்தன் நினைவிலே
மனதில் சொர்க்கம் திறந்ததே
கண்பார்வை உன்னில்
தொடர்ந்ததே.....

மேலும்

பிரதீஷ் நாகேந்திரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2022 8:17 pm

உன்னை பார்க்கும் பார்வையாய்
கோர்க்கும் கோர்வையாய் நினைத்தேனே
சுருதி சேர்க்கும் சேர்வையாய்
தாக்கும் ஏக்கமாய் தவித்தேனே...

எண்ணங்கள் பலதும் ஓடுதே
வண்ணங்கள் பார்க்க தூண்டுதே
உந்தன் கன்னங்கள் சிவக்க
எண்ணங்கள் மலர ஏங்குதே...

காதல் வார்த்தையாய்
உன் தாக்கம் ஏக்கமாய்
கண் பார்க்கும் தூரமாய்
மோதல் காதலாய் தொடர்ந்தேனே...

வாழும் காலங்கள்
ஏழு ஜென்மங்கள்
கனவாய்....
நீ துரத்திடும் நினைவாய்
உன் ஏக்கங்கள் ரணமாய்
தூங்குதே...

மேலும்

நிலவோடு வாழும்
நிஜமாக நீயும்...

மனதோடு இருக்கும்
கனிவோடு நாளும்...

இனிமையாய் சிரித்தாய்
நிஜங்கள் புலப்பட...

பெண்மையின் அர்த்தங்கள்
உன்னில் வெளிப்பட...

அடிமைத்தனத்தை உடைத்தாய்
கர்வம் உடைந்திட...

பலதுறையில் கால்பதித்தாய்
வெற்றியை முத்தமிட்டாய்...

கண்இமைக்கும் நேரத்தில்
சிகரத்தை தொட்டுவிட்டாய்...

பட்டாம்பூச்சியாய் சிறகடித்தாய்
பெண்ணடிமையை துரத்திவிட்டாய்...

வியந்துபார்த்தேன் உன்னை
விடிந்துவிட்டது பெண்மை...

மேலும்

என் ஊர் நாகர்கோயில் பகுதியை சேர்ந்த கிராமம் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது மலை பிரதேசம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது நன் கிடைத்த வாய்ப்பை தவற விட கூடாது என்று புறப்பட்டு சென்றேன் என்னுடன் என் நண்பர்களும் வந்தார்கள் செல்லும் வழியில் பலவிதமான இயற்கை காட்சிகளை ரசிக்கும் வொய்ப்புகள் கிடைத்தது மனம் நெகிழ்ந்து ஆகாயத்தில் மிதப்பது போன்று தோன்றியது கண்களுக்கு இதமான காட்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஒரு நிமிடம் பிறவி பலனை அடைந்துவிட்டோமோ என்று தோன்றியது அப்படி அழகான இயற்கை காட்சிகளை பார்க்க முடிந்தது.

சிறிது தூரம் சென்றதும் விலங்குகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அப்பகுதியில் அதிகமான குரங்க

மேலும்

நிலா நீ என்னை நனைத்திடும் உலா
மழை வானில் தோன்றும் கனா
கண் முன் தோன்றும் மாலா
பெண் முன்னே சென்றால் நீ தான்
எந்தன் நிலா....

பூவாய் பூத்துக் குலுங்கும் என்
நெஞ்சில் என்றும் மிளிரும் அதன்
எண்ணம் என்னுள் திழங்கும்
ஜென்மம் பல கடந்தும் உன்
நினைவில் வாழும் நிலா....

எண்ணம் என்னை தொடர என்
நெஞ்சில் வந்து வருட உன்
பெண்மை என்னை விரட்ட கை
தொட்டு தொட்டு சிலிர்க்க கண்
முன்னே சென்றிடும் நிலா....

மழை சொட்ட சொட்ட நனைத்து
எனை விட்டு விட்டு பிரிந்து
செல்வாய் என்று நினைத்து அதை
என்னுள் வைத்து புதைத்து என்றும்
வாழ்கிறேன் என் நிலா....

இரவில் முகம் காட்டி பல
விடியல்களை தீட்டி இசை
வீணை த

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே