மதுரை வாசம்
மானா மதுரை
மண மணக்கும்
மல்லிபூ மதுரை...
பக்தரை காக்க
மீனாட்சி கோவில்கொண்ட
பக்தியின் மதுரை...
சித்தமெல்லாம் நீயிருக்க
புலவர்கள் புடைசூழ
கவிப்பேரவை மதுரை...
உலகமே வியந்து
வீரத்தை போற்றுகின்ற
தமிழின மதுரை...
துள்ளி குதித்தோடும்
காளையை அடக்கிடும்
வீர மதுரை...
கோவலன் கண்ணகி
பறை சாற்றும்
அக்னி மதுரை...
அரசனும் புலவனும்
ஓன்று சேர்ந்த
புண்ணிய மதுரை...
உலகமே உற்றுநோக்கும்
அறிவு விளக்காய்
அமைந்த மதுரை...