பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள்

தங்கக் கதிர்களை கதிரவன் விரிக்க
விளைந்த நெற்கதிர்கள் ஆடிச் சிரிக்க
உண்மை உழைப்பின் அருமை கண்டு
உழவர்கள் யாவரும் கூடி மகிழ்ந்து
களிப்போடு புதுப்பானையில் உலை வைத்து
புத்தாடையுடன் எல்லோரும் ஆதவனை வணங்கி
பொங்கலோ பொங்கல் என கூவி அழைத்து
உழவின் பெருமையை போற்றி கொண்டாடும்
இத்திருநாள் தமிழர் திருநாள் என அறிவோமே!

எழுதியவர் : கே என் ராம் (15-Jan-22, 1:17 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : pongal thirunaal
பார்வை : 34

மேலே