காட்டுள்ளிக் கிழங்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நஞ்சோடு சீதகபம் நாடாதி ரைப்புமறும்
பஞ்சாக மூல பகந்தரம்போம் - பஞ்சணைசேர்
வீட்டுள் ளிருக்கும் வினோத மடமயிலே
காட்டுள் ளிகிழங்கைக் கண்டு
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் பாம்பின் விடம், சீதளத்தால் ஏற்பட்ட கோழை, சுவாசம், மூலகப நோய் ஆகியவை நீங்கும்