சண்பகமர வேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்
நேரே பசியெழுப்பும் நிச்சயமே - ஓருங்கால்
பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும் வாசமுள்
சண்பக,ம ரத்தின்வேர் தான்
- பதார்த்த குண சிந்தாமணி
இது உட்டிணம், சுரம், கண்தோடம் ஆகியவற்றை நீக்கி பசியை யுண்டாக்கும்