தென்னம்பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மேகம் அகக்கொதிப்பு வீறுவி ரத்தபித்தம்
வேக அசிர்க்கரநோய் வீழ்பிரமி - தேகத்தில்
வின்னம்பா லிக்கும் விஷபாகம் போகவென்றால்
தென்னம்பா ளைப்பூவைத் தின்

- பதார்த்த குண சிந்தாமணி

தென்னம்பூ பிரமேகம், உட்காய்ச்சல், இரத்தம் பித்தம் அசிர்க்கரம், ஒழுக்குப் பிரமியம், விடபாகம் இவை நீங்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 5:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே