பனம்பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பனையிலுறு பூவதுதான் பங்கமுறாக் குன்ம
வினையகற்றும் நீர்க்கட்டை மீட்கும் - முனையான
பன்னோய் ஒழிக்கும் பழஞ்சுரத்தைப் போக்கிவிடும்
மின்னே இதனை விளம்பு

- பதார்த்த குண சிந்தாமணி

வாதகுன்மம், நீர்க்கட்டாகிய மூத்திரச் சிக்கல், பல்நோய், பழஞ்சுரம் ஆகியவற்றைப் பனம்பூபோக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jan-22, 5:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே