இயற்கையும் மனிதனும்
என் ஊர் நாகர்கோயில் பகுதியை சேர்ந்த கிராமம் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது மலை பிரதேசம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது நன் கிடைத்த வாய்ப்பை தவற விட கூடாது என்று புறப்பட்டு சென்றேன் என்னுடன் என் நண்பர்களும் வந்தார்கள் செல்லும் வழியில் பலவிதமான இயற்கை காட்சிகளை ரசிக்கும் வொய்ப்புகள் கிடைத்தது மனம் நெகிழ்ந்து ஆகாயத்தில் மிதப்பது போன்று தோன்றியது கண்களுக்கு இதமான காட்சிகளை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஒரு நிமிடம் பிறவி பலனை அடைந்துவிட்டோமோ என்று தோன்றியது அப்படி அழகான இயற்கை காட்சிகளை பார்க்க முடிந்தது.
சிறிது தூரம் சென்றதும் விலங்குகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அப்பகுதியில் அதிகமான குரங்குகள் மற்றும் பாம்புகள் இருந்தது அவற்றிற்கு தொந்தரவு கொடுக்காமல் நகர்ந்து சென்றோம் அனைவர்க்கும் தாகம் ஏற்பட்டது தண்ணீர் கிடைக்குமா என்று தேடி பார்த்தோம் அங்கே அழகான மலை நீர் ஓடை இருந்தது நீரின் சுவை தற்பொழுது நினைத்து பார்த்தாலும் தித்திக்கும் சுவையை உணரமுடிகிறது அனைவரும் தண்ணீரை பருகி விட்டு மேலும் நகர்ந்தோம்.
மலை உச்சியை அடையும் பொது சிறிய மலைவாசி கிராமம் இருந்தது அவர்களிடம் பழகியபோது தான் தெரிந்தது ஒரு மனிதன் தன்னை சார்ந்த மனித உயிர்களிடம் எவ்வாறு அன்பு செலுத்துகின்றனர் என்று இப்பொழுதும் மனித பண்பு மாறாத இயல்பான வாழ்க்கையை வாழ்பவர்கள் மலை கிராமத்தினர் தான் என்று அவர்கள் மூலமாக தெரிந்துகொண்டோம் அவர்கள் தங்கள் மனித பண்பை மாற்றி அமைக்காமல் வாழ்வதற்கு கரணம் அருமையான இயற்கை சூழல் தன என்று தோன்றுகின்றது.
நாமும் இயற்கையை அளிக்காமல் இயற்கையோடு வாழ்ந்தோமானால் மனித பண்பும் மாறாமல் வாழலாம் என்று தோன்றியது....