அஜிங்யா அசிங்கா

போபாலிலிருந்து பாட்டி பர்வதம் அம்மாளுக்கு கொள்ளுப் பேரனா குமாரின் செல்பேசி அழைப்பு:
■■■■■■■◆◆
செல்பேசி ஒலிக்கிறது.
அலோ, யாரு பேசறது. நான் பருவதம் பேசறேன்.
@@@@@
பாட்டி, நான் குமார் பேசறேன். என் மனைவி நிஷாவுக்கு (Nisha = night) இரட்டைப் பெண் குழந்தைங்க பொறந்து ஒரு வாரம் ஆகுது.
###########
அப்பிடியா சாமி குமாரு. நிசாவும் மகாலட்சுமிங்களும் நல்லா இருக்கிறாங்களா சாமி.
#@@@@@@|
எல்லாம் நல்லா இருக்கிறோம். நீங்க?
@@@@@
எங்குளுக்கு என்ன சாமி. நாங்க நாட்டுக் கட்டைங்க. எங்கள எந்த நோய் நொடியும் அணுகாது. கொழந்தைங்களுக்குப் பேரு வச்சி பதிவு பண்ணீட்டீங்களா?
########
உம். ஒரு குழந்தை பேரு அழகான இந்திப் பேரு. அஜிங்யா. (Ajinkya = inviincible). இரண்டாவது குழந்தைக்கு நீங்க தான் அதே மாதிரி ஒரு பேரைச் சொல்லணும்.
@@@@@@@
அசிங்கியா அழகான பேருடா குமாரு. ரண்டாவது பிள்ளைக்கு 'அசிங்கா' -னு வையுடா குமாரு. நம்மா ஊரு சனங்க இந்தப் பேரைக் கேட்டா "சுவ்வீட்டு நேமு" -ன்னு சொல்லுவாங்கடா குமாரு.
@@@@@@@
'அசிங்கா' -ன்னா வைக்கிறது. அந்த மாதிரி பேரு இந்தில இல்லையே.
@@@@
இல்லடா குமாரு. இப்பெல்லாம் நம்ம தமிழ் சனங்க இந்தி பேரு மாதிரி இருக்கிற அர்த்தம் இல்லாத பேருங்களப் பிள்ளைங்களுக்கு வைக்கிறத்தான் நாகரிகமா நெனைக்கிறாங்க.
@@####@@@#
சரிங்க பாட்டி. ஊரோட ஒத்துப்போறது தான். நானும் தமிழன்னு நிரூபிக்க நீங்க சொல்லற பேரையே என் குழந்தைக்கு வைக்கிறேன் பாட்டி.
■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
சிரிக்க அல்ல. சிந்திக்க