நிலா

நிலா நீ என்னை நனைத்திடும் உலா
மழை வானில் தோன்றும் கனா
கண் முன் தோன்றும் மாலா
பெண் முன்னே சென்றால் நீ தான்
எந்தன் நிலா....

பூவாய் பூத்துக் குலுங்கும் என்
நெஞ்சில் என்றும் மிளிரும் அதன்
எண்ணம் என்னுள் திழங்கும்
ஜென்மம் பல கடந்தும் உன்
நினைவில் வாழும் நிலா....

எண்ணம் என்னை தொடர என்
நெஞ்சில் வந்து வருட உன்
பெண்மை என்னை விரட்ட கை
தொட்டு தொட்டு சிலிர்க்க கண்
முன்னே சென்றிடும் நிலா....

மழை சொட்ட சொட்ட நனைத்து
எனை விட்டு விட்டு பிரிந்து
செல்வாய் என்று நினைத்து அதை
என்னுள் வைத்து புதைத்து என்றும்
வாழ்கிறேன் என் நிலா....

இரவில் முகம் காட்டி பல
விடியல்களை தீட்டி இசை
வீணை தனைமீட்டி
என்னுள் வந்திடும் உலா என்றும்
நீதான் எந்தன் நிலா....

எழுதியவர் : பிரதீஷ் நாகேந்திரன் (25-Aug-21, 2:27 pm)
Tanglish : nila
பார்வை : 209

மேலே