காதலின் வலிமை
உன்னை பார்க்கும் பார்வையாய்
கோர்க்கும் கோர்வையாய் நினைத்தேனே
சுருதி சேர்க்கும் சேர்வையாய்
தாக்கும் ஏக்கமாய் தவித்தேனே...
எண்ணங்கள் பலதும் ஓடுதே
வண்ணங்கள் பார்க்க தூண்டுதே
உந்தன் கன்னங்கள் சிவக்க
எண்ணங்கள் மலர ஏங்குதே...
காதல் வார்த்தையாய்
உன் தாக்கம் ஏக்கமாய்
கண் பார்க்கும் தூரமாய்
மோதல் காதலாய் தொடர்ந்தேனே...
வாழும் காலங்கள்
ஏழு ஜென்மங்கள்
கனவாய்....
நீ துரத்திடும் நினைவாய்
உன் ஏக்கங்கள் ரணமாய்
தூங்குதே...