புல்லறத்தைத் தேய்த்து உலகினோடும் பொருந்துவதாம் நல்லறம் – அறநெறிச்சாரம் 8

நேரிசை வெண்பா

வினையுயிர் கட்டுவீ டின்ன விளக்கித்
தினையனைத்தும் தீமையின் றாகி - நினையுங்கால்
புல்லறத்தைத் தேய்த்துலகி னோடும் பொருந்துவதாம்
நல்லறத்தை நாட்டு மிடத்து 8

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஆராந்து பார்த்தால், நல்லறத்தினை நிலைநிறுத்தக் கருதின், அந்நல்லறமானது வினையும் ஆன்மாவும் பந்தமும் வீடுபேறும் ஆகிய இவற்றை நன்கு உணர்த்தி, தினையளவும் குற்றமில்லாததாய் பாவச்செயல்களை அழித்து உயர்ந்தோர் ஒழுக்கத்தோடும் பொருந்துவதாகும்.

குறிப்பு: தகட்டு - பாசம். தினை - சிறிய அளவு. நல்லறத்திற்கு எதிர்மொழி புல்லறம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-21, 7:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே