😣தனிமையில் துணையாக
கண்ணீரால் நிலத்தை
நனைத்த வானம்
கூறியது -அதனுடன்
சத்தமும் ஒளியும்
சேர்ந்து இடியும் மின்னலும்
கூறியது.....
காற்றினை தூது
அனுப்பிய மரங்களும்
கூறியது....
காற்றடித்து வரும்
தூசிகள் கூட
கூறியது....
பனிமூட்டமாய் வந்த
வாகனத்தின் புகை
கூறியது.....
கண் கூசும் வெளிச்சத்தில்
வந்த வாகனத்தின் ஒளி
கூறியது - அந்த
ஒளியில் வந்த நிழலோ
கூறியது....
"உன்னுடன் நான் இருக்கிறேன் என்று "

