உங்களுக்குப் புரியும்

உங்களுக்குப் புரியும்.*

எட்டி எட்டிப்
பார்த்திடுவான்,
எண்ணத்தையே
கெடுத்திடுவான்.

என்னதென்று
சொல்வது ?
ஏளனமாய்ப்
பார்த்திடுவார் !
எள்ளியே
நகைத்திடுவார் !.

பாவி அவனை
புதைக்கலாமென்றால்?
நானுமல்லவோ
புதைந்திடுவேன்.

புதைக்காதே ஏன்கிறது
விஞ்ஞானம்,
புதைத்திடு என்கிறது
மதவாதம்.

காத்திருக்கிறேன்
காலனுக்கு,
கட்டை ஏறிய பின்பும்,
எட்டி எட்டிப் பார்ப்பானோ?
தெரியவில்லை எனக்கு.

அங்கு சென்ற பின்
அவனிடமே கேட்டிடுவேன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.
*ன்மகா றன்வெ தைத்லகா

எழுதியவர் : சண்டியூர் பாலன் (10-Sep-21, 9:46 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 118

மேலே