அடர் மழை

அடர் மழை

அடர்ந்து
பெய்யும் மழை

ஓட்டு வீடுதான்

அறைக்குள்
அடைபட்டு கிடக்க

மழை துளிகள்
சோ வென
சத்தமிட்டு
ஓட்டின் மேல்
விழும் சத்தம்

மனம் நிறைய
பயம் கலந்த
மகிழ்ச்சி

ஒற்றை சன்னலில்
கம்பிகள் நடுவே
எட்டி பார்க்க
முகத்தில் தெறிக்கும்
மழையின் தூறல்கள்

முகம் முழுக்க
வாங்கி முத்தமிட்டு
மகிழ்கிறேன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-Sep-21, 1:18 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : adar mazhai
பார்வை : 113

மேலே