சும்மா நீ அலட்டிக்காதே

சும்மா நீ அலட்டிக்காதே.

காற்று வந்துவிட்டால்? காய்ந்திருக்கும் இலைகள்,
காற்றோடு காற்றாகவே
கலைந்து சென்று விடும்.

இந்தக்
காட்சி கூறும் உண்மை?
காலம் வந்துவிட்டால்,
காய்ந்திருக்கும் மனிதர்கள்,
கரைவார் இயற்கையுடன்.

இல்லையெனில்
புது இலைகள் வாழ
மரத்தில் இடம் உண்டோ?
புது மனிதர்கள் வாழ
புவியில் இடம் உண்டோ?

புவித்தாயின் நியதி இது,
சும்மா நீ அலட்டிக்காதே.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (9-Sep-21, 4:44 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 85

மேலே