காதலடி

அக்கரையில் அவள் வேதம் படிக்கிறாள்
இக்கரையில் அவனாே பேதம் கற்கிறான்

இடையில் ஓடும் மரபு நதியே
நீ எங்களுக்கு வேண்டாத சகதியே

இரண்டு மனங்கள் ஒன்றானதே
மதங்களும் இங்கே பாெய்யானதே

பல நூல் படித்து வந்த ஞானமிது
ஒற்றை நூல் தடுப்பதேது

இயற்கை தந்த வாழ்க்கையடி
இயைந்துப் பாேவது காதலடி

எழுதியவர் : (11-Sep-21, 4:00 pm)
சேர்த்தது : Arvind
Tanglish : kathaladi
பார்வை : 185

மேலே