தனிமையில் கற்றுக் கொண்ட பாடம்

நேரத்தை பிரிக்க கற்றுக் கொண்டேன்.
பிரித்த நேரத்தில் சிந்திக்க கற்றுக் கொண்டேன்.
சிந்தித்ததில் நற்சிந்தனையின் அளவு குறைவு என்பதை கற்றுக் கொண்டேன்.
நற்சிந்தனையின் அளவை அதிகப்படுத்த கற்றுக்கொண்டேன்.
நற்சிந்தனையோடு செயல்பட கற்றுக்கொண்டேன்
நற்செயலின் மூலம் நான் யார்? என்று கற்றுக் கொண்டேன்.
நான் யார் என்று தெரிந்தவுடன் மனமும், உடலும், பறவையின் இறகை போல் லேசானதை கற்றுக் கொண்டேன்.
மனம் லேசான போது எனக்கான தேவையை கற்றுக் கொண்டேன்.
என் தேவையை பூர்த்தி செய்யக் கற்றுக் கொண்டேன்.
என் தேவை பூர்த்தி செய்ய கற்றுக் கொண்ட நான்,
பாத்திரம் அறிந்து உதவி செய்யக் கற்றுக் கொண்டேன்.
உதவி பெற்றவர் மனதால் வாழ்த்தும்போது இருக்கும், சுகத்தைக் கற்றுக்கொண்டேன்.
இதைவிட சுகம் வேறு எதுவாக இருக்க முடியும். என்பதை, கற்றுக் கொண்டேன்.
இந்த சுகத்தோடு கை, கால்களை நீட்டி தூங்கும் போது, கிடைக்கும் நிம்மதியை கற்றுக் கொண்டேன்.
நிம்மதியை கற்றுக் கொடுத்த தனிமைக்கு நன்றி கூறக் கற்றுக்கொண்டேன்.

எழுதியவர் : இரா. தெய்வானை (17-Sep-21, 5:18 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
பார்வை : 143

மேலே