என் கேள்விக்கு என்ன பதில்
என் கேள்விக்கு என்ன பதில்.
முதியவர்:
அகிலம் ஆளும்
அன்னையே!
ஆசைகள் சில
எனக்கு உண்டு,
அவை எல்லாம்
போக்கிடவே,
அன்னையே நீ எப்ப
வருவாய் சொல்?
பலகாலம் வாழ்ந்தாச்சு,
பார்ப்பதெல்லாம்
பார்த்தாச்சு,
இங்கு எனக்கு
என்ன வேலை?
இமயவளே நீ எப்ப
வருவாய் சொல்.?
அன்னை :
என் வீடு வெகு
தூரம் இல்லை,
என் வீட்டில் உனக்கு
ஓர் இடம் உண்டு,
அடையும் காலம் வெகு
தூரம் இல்லை,
அமைதி கொள்
என் மகனே.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.