காசு நீயுன்னா பணம் உந் தங்கச்சியா
காசு நீயுன்னா பணம் உந் தங்கச்சியா?
@@@@@@@@@###
இரண்டு சிறுமிகள் வருகிறார்கள். அவர்களைப் பார்த்து போக்குவரத்து வசதி இல்லாத சிற்றூரில் வாழும் குப்பாயிப் பாட்டி:
யாருடி நீங்க (இ)ரண்டு பேரும்? ஊருக்குப் புதுசா இருக்குது!
######
ஆமாம் பாட்டி. நாங்க (இ)ரண்டு பேரும் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம்.
########
யாருக்குச் சொந்தம்.
#######
பாகாயிப் பாட்டியோட பேத்திங்க.
######
ஓ.. பாகாயோட பேத்திங்களா? பாகாயி.எந் சித்தப்பா பொண்ணுதான். எனக்கு தங்கச்சி. சரி... உங்க பேருங்களச் சொல்லுங்க.
######
பாட்டி நாங்க (இ)ரண்டு பேருள நாந்தான் மூத்தவ. அக்கா. அவ எந் தங்கச்சி.
######
உம் பேரு என்ன?
#####
எம் பேரு ஹாசினி.
@@@@@@
என்னது? 'காசு நீ'யா?
########
இல்லங்க பாட்டி, ஹாசினி.
#######
நானும் அதைத்தான்டி சொன்னென். காசு நீயுன்னா உந் தங்கச்சி 'பணம் நீ' உந் தங்கச்சி பேரா?
@@@@@@@
போங்க பாட்டி. எம் பேரை கிண்டல் பண்ணாதீங்க. இந்தப் பேரை இந்துக்களும் வச்சுக்கலாம். முஸ்லீம் பொண்ணுங்களும் வச்சுக்கலாம். (இன்டியாசைல்ட்நேம்ஸ்.காம்). எந் தங்கச்சி பேரு மயூரி.
#######
சரி. சரி. நல்லா இருங்க.
■■■◆■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Hasini = Happy, Full of Laughter. This name is shared across persons who are either Hindus or Muslims.
Mayuri = Peacock.