மாலை சூட வா-பாகம் ஒன்று
உன் மேல் கொண்ட மோதலால் வந்த காதலால்
இமையில் நீ இறங்கியே என் மனதை நீ ஆள்கிறாய்
வார்த்தைகள் பல பேச மனம்
நினைத்தும் ஊமை போன்றே
எனை உணர்கிறேன்
எதிலும் மனம் நாட்டம் இல்லாமல் போகவே நான் இயங்காமலே இற்றுப்போகிறேன்
உண்ண உணவு பல இருந்துமே நீ கடந்த காற்றை அருந்தி
உயிர் வாழ்கிறேன்
கன்னி மனம் நொந்தே கண்ணீர் விழி கொண்டே காத்து நிற்கிறேன்
காலம் நீ கடத்தி காதல் மனம் உருக்கி கோதை விழி குளமாக்காமல்
நாள் ஒன்றை நீ குறித்து நல்ல செய்தி ஒன்றைத் தந்து என் சோகம்தனை மாற்ற மண நாளும் குறித்து வா எனை மணமேடை ஏற்றியே மாலை சூட வா..