காந்தி

காந்தி
💰💰💰💰💰
ஆயிரம் கட்சிகள் நாட்டினில் பிறக்க ,
அதனதற்கென்று தலைவனும் இருக்க ,
வெள்ளைச் சட்டையே அனைவரும் தரிக்க ,
வெளியில் தெரிய தலைவர் படம் இருக்க .

எந்தன் கட்சி எதுவென குழம்பி
கண்ணாடி முன் நின்று கவனமாய் பார்த்தேன் -- தெரிந்தது
உந்தன் படமே ரூபாய் நோட்டில் --ஆஹா
வந்தது மனதில் அத்தனை மகிழ்ச்சி...

அந்தக் கட்சிகள் எனக்கு எதுக்கு
உந்தன் கட்சியில் என் உயிரேயிருக்கு..
காந்தி உந்தன் புன்சிரிப்பை
-- தினம்
காட்டிட நிறைந்திடு என் பையில்..

💸💸💸💸💸💸💸💸💸💸

எழுதியவர் : க.செல்வராசு (2-Oct-21, 2:34 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : gandhi
பார்வை : 39

மேலே