உன் மதிப்பு

உன்னை மதிக்காத
மனிதர்களுடன்
உன் நேரத்தை செலவு செய்து

உன் மதிப்பை
இழந்து விடாதே...!!

மாலை மரியாதைகள்
உன்னை
தேடி வர வேண்டும்
அதனை தேடி சென்று
உன் மதிப்பை
இழந்து விடாதே...!!

மதியாதார் வாசலை
மிதியாதே என்று
ஔவை பாட்டி
சொன்னதை
என்றும் மறவாதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Oct-21, 6:23 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : un mathippu
பார்வை : 537

மேலே