புதுவாழ்வு பிறந்தது

புதுவாழ்வு பிறந்தது

கிராமங்களின் அழகு,தூய்மை, இன்னும் பல விஷயங்கள் எனக்குப்பிடிக்கும். நான், நகரத்திலிருந்து சொந்த கிராமத்திற்கு ப் போக வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் அதை அனுபவிப்பது உண்டு . ஆனால் கிராமத்தின் அறியாமையை மட்டுமே என்னால் ஜுரணிக்க முடிவதில்லை .

அன்று கிராமத்தில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து வாரப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன். என் காலருகே பல குஞ்சுகளுடன் கோழி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது . அடர்த்தியான மரங்களின் வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது. அந்த விடியற்காலையில் எண்ணெய் எடுக்கும் மரச்செக்கின் சத்தம் , மாடுகளின் சலங்கை ஒலியுடன் மாடுகளை அதட்டும் செக்கின் சொந்தக்காரர் குரலுடன் சேர்ந்து வந்தது .


புத்தகத்தை மூடிவிட்டு செக்கு இருக்கும் பக்கம் சென்றேன். மாடுகள் முழுவட்டமாய் இசைத்தட்டு போல் சுற்றி வந்து கொண்டிருந்தன.


அந்த செக்கின் சொந்தக்காரரின் பெயர் வெள்ளை . ஆனால் அவர் நிறம் அட்டைக்கருப்பு. படிப்பறிவு இல்லாதவர் . செக்கை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் குடும்பம் . சில நாட்கள் விடியற்காலையில் ஆரம்பிக்கும் செக்கின் ஒலி சில சமயங்களில் மாலை வந்து இருட்டிய பிறகுதான் முடிவுக்கு வரும். சில சமயம் ஒன்றும் வேலையில்லாமல் ஓலைக் கீற்றால் மூடப்பட்டிருக்கும் வேலை இல்லை என்றால் அன்று அடுப்பு எரியாது.

மாலை வேளைகளில் தவறாமல் அவர்கள் வீட்டில் சண்டை நடக்கும் . ஏழைகளின் வீட்டில் தரித்தரமும் சண்டையும் மட்டுமே குடியிருக்கும்?

ஒவ்வொரு முறை நான் ஊருக்கு வரும் போதும் சண்டை இல்லாத நல்ல நாள் ஒன்று உண்டா? என நன் நினைப்பதுண்டு ஆனால் ஏமாற்றம் அடைவதுதான் மிச்சம்.

ஒருமுறை மாடுகள் பிடிக்கச்சென்று பணத்தை எண்ணத்ரிதெரியாமல் ஏமாந்த அனுபவம் வெள்ளைக்கு ஏற்பட்டது உண்டு . இவருக்கு படிக்கத்தெரியாது என்பதனாலேயே ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம். ஏமாந்த எரிச்சலி ல் வீட்டிற்கு வந்து கஷ்டபடுவார்.


பிள்ளைகளுக்கு படிக்க ஆசை இவருக்கோ வீட்டில் இருந்து கொண்டு இவருடன் செக்கு உலக்கை மாற்ற ஒத்தாசையாக இருப்பதற்கு ஆட்கள் தேவை என்ற மனப்பான்மை தன பிள்ளைகளையும்ஒரு நாள் தகராறு செய்து பள்ளிக்கூடம் அனுப்பாமலே நிறுத்திவிட்டார்.

வேர்கடலைஎள் வாங்கும் இடத்தில் வித்தியாசமான விலைகளைச் சொல்லி இவரை ஏமாற்றும் வணிகர்கள். சமயத்தில் என்னிடம் தினசரிகளைப் பார்த்து விலையைச்சொல்லச் சொல்வார் . விலைகளில் வித்தியாசம் இருந்தால் ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் எல்லோர் மீதும் எரிந்து விழுவார் அல்லது மாடுகள் அடி வாங்கும் அலறி ஓடும் .

சாப்பாட்டிற்கே தினசரி கூலியில் இருந்துதான் பணம் தருவார் . பசி நேரத்திற்கு சரியான சாப்பாடு இல்லை என்றால் மனைவியிடம் தகராறு செய்வார்.


எரிச்சல், இயலாமை அவரை தகராறுக்கு அழைத்துச்சென்றுவிடும் .


ஒருநாள் அவர் பையன் செக்கு மாடுகளை விரட்டிக்கொண்டு இருந்தான் . அவனை கூப்பிட்டு விசாரித்தேன் . படிப்பின் மீது அவனுக்கு இருந்த வருப்பம் தெரிந்தது . மறுநாள் முதல் அவனைப் பள்ளிக்கூடம் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.


இன்னொரு முறை ஊருக்கு வந்தபோது பார்த்தேன் . வெள்ளையின் பையன்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். வெள்ளை தானும் முதியோர் பள்ளிக்கு ஒரு மாதமாய்ச்சென்று வருவதாய் சந்தோஷமாகச் சொன்னார் . இப்போதெல்லாம் தகறாரு ஏதும் இல்லாமல் குடும்பம் மகிழ்ச்சியாக நடப்பதைச் சொன்னார்.கல்வி மூலமாக வாழ பல வழிகள் உள்ளதை தெரிந்து கொண்டேன். நவீன உலகத்தைத்தெரிந்துகொண்டேன். எந்திர செக்கு ஒன்று வாங்கிக்கொண்டால் என் பையனை மேலே படிக்கச் வைக்கலாம்.

படிக்காதவர்களை படிக்கச்செய்ய படித்தவர்கள் தானேமுன்னிற்க வேண்டும் . நான் என் கடமையைத்தானே செய்தேன்.

மீண்டும் கிராமத்தில் நான் வீட்டுத்திணையில் உட்கார்ந்து பத்திரிகைகள் படித்துக்கொண்டிருந்தேன். என் காலருகே பல குஞ்சுகளுடன் கோழி மேய்ந்து கொண்டிருந்தது. அடர்த்தியான மரங்களின் வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது. அந்த விடியற்காலையில் எண்ணெய் எடுக்கும் மரசெக்கின் சத்தம் மாடுகளின் சலங்கை ஒலியுடனும் மாடுகளை அதட்டும் வெள்ளையின் குரலுடனும் வெள்ளையின் மகன்கள் வீட்டுத்திண்ணையில் பாடபுத்தகத்தைபிடிக்கும் சப்தத்துடன் சேர்ந்து இனிமையாக வந்தது.

கதை ஆக்கம் : வெங்கட்

எழுதியவர் : வெங்கட் (6-Oct-21, 7:11 pm)
சேர்த்தது : வெங்கட்
பார்வை : 210

மேலே