முறத்தகல மூஞ்சிக்காரி
காலைலயே யாரைட திட்டிட்டு இருக்கிற?
@@@@@
யாரைத் திட்டுவேன். அந்த பூசணிக்காய் மூஞ்சிக் குண்டச்சியைத்தான்டி.
@@@@@@
என்னடி செஞ்சா இன்னிக்கு. அவ நம்ம தெருவே வெறுக்கற நாதாறிடி. எப்பப் போனாலும் தெருவில கெடக்கிற எதையாவது ஒதுச்சு எங்க வீட்டுப் பக்கம் தள்ளிட்டுவிட்டுப் போறாடி. அவள நெனைச்சா....
@@@@@@
என்னடி சொல்லற அந்த மொறத்தகல மூஞ்சிக்காரியைப் பத்தி?
@@@@@@@
அட, பொருத்தமான அந்தப் பேரை அவுளுக்கு வச்சது யாருடி?
@@@@##
அட்டகாசம் பண்ணற யாரா இருந்தாலும் அவுங்களுக்கு பொருத்தமான பட்டப்பேரை வைக்கிறது யாருடி?
@@@###
யாரா? உங்க பாட்டிதான். அந்த பூசணிக்காய் மூஞ்சிக்காரிக்கு நல்ல பொருத்தமான பேரு. சரி. நேத்து நடந்ததச் சொல்லறேன். தெரு நாய்களுக்கு சாப்பாடு போட்டேன். (இ)ரண்டு நாய்கள் வந்து சாப்பாட்டை மூந்து பாத்துட்டு சாப்பிட ஆரப்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு கல் விழுந்தது. நாய்கள் பயந்துட்டு ஓடிச்சு. திரும்பிப் பாத்தா மொறத்தகலம் தான் அங்க கையை ஓங்கிட்டு இன்னொரு கல்லை அடிக்க நின்னா. இவ வயசு என்ன? குறும்புக்கார பொடிப் பையனா இவ. த்து.
அப்பறம் அவ பத்தடி தள்ளிப் போயிருப்பா. அந்த நாய்கள் நான் போட்ட தயிர்ச் சோத்தை சாப்பிட வந்துச்சு. திரும்பிப் பாத்த ஒரு அகல மூஞ்சிக்காரி ஒரு குச்சியை எடுத்துட்டு நாய்களை அடிக்க ஓடி வந்தா.
@@@@@@
அப்பறம் என்ன ஆச்சு?
@@@@@@
பசி வெறில இருந்த நாய்கள் கொறச்சுட்டு அவளைத் தொரத்த ஆரம்பிச்சு. குண்டச்சி ஓடின வேகத்தில குப்புற விழுந்தாடி. நாய்கள் ஏளமான அவளப் பாத்துட்டு திரும்பி வந்து சாப்பிட ஆரம்பிச்சுது.
குண்டம்மா அப்பிடியே கீழ கெடந்தா.அதைப் பாத்த அந்த நரம்புத் தாத்தா தான் அவளத் தூக்கிவிட்டாரு. காலில நல்ல அடிபோல. நொண்டிட்டே வீட்டுக்குப் போனா.
@@@@@@
மொறத்தகல மூஞ்சிக்காரி பத்து நாளைக்கு மாவுக்கட்டுப் போட்டுட்டு படுத்துக் கெடந்தா திருந்திடுவாடி.
@@|||@@@@
ஆமான்டி அந்தப் பூசணிக்காய் மூஞ்சி திருந்திடும்.