உன் நினைவோடு கரைந்தவள்

உன்னோடு கைகோர்க்கும்
    ஒற்றை நிமிடத்திற்காக.,
நினைவோடு கரைந்தேன்
     எத்தனையோ நாட்கள்...
உன் முகத்தில் தோன்றும்
    இதழோர சிரிப்பிற்கு.,
ஏங்கித்தான் போகிறேன்
    மனதோடு மறைத்து...
நீ பார்க்காத பொழுது
   உனைபார்க்கும் தருணம்.,
ஓவியமாய் பதியும்
   பாவையவள் இதயத்தில்.....
உன் கண்கள் பார்த்து.,
   உன் சுவாசமாய் வாழ
நினைவுகளோடு கலந்திருக்கும்
    காரிகை நான்

எழுதியவர் : புவனேஸ்வரி (9-Oct-21, 4:17 pm)
சேர்த்தது : புவி
பார்வை : 459

மேலே