வட்டம்

வட்டம்.

வட்டம் போட்டே
பூச்சியம் போட்டான்.
பூச்சியம் இல்லை
எனில் !
கணிதம் இல்லை.
கணிதம் இல்லை
எனில்!
விஞ்ஞானம் இல்லை.

வட்டம் போட்டே
சக்கரம் செய்தான்.
சக்கரம் இல்லை
எனில்!
வண்டில் இல்லை.
வண்டில் இல்லை
எனில்!
மனிதன் காட்டிலேயே
இருந்திருப்பான்.

கடவுளுக்கு பிடித்தது
இந்த வட்டம்.
சூரியன் வட்டம்,
பூமி வட்டம்,
சந்திரன் வட்டம்..... ,
இன்னும் பல
வட்டங்கள் இட்டு
விட்டு, அவனும்
பூச்சியத்துக்குள்*
ஒழித்துக் கொண்டான்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.
* கண்ணதாசன் கவிதை

எழுதியவர் : சண்டியூர் பாலன் (18-Oct-21, 2:03 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : vattam
பார்வை : 71

மேலே