வான் மழையே
வான் மழையே...
வந்த வரை போதுமென்று வாய்திறக்க மாட்டோம்...
சொந்த மண்ணை நிரப்ப
நீரின்றி யாரோ...
முத்துக்கள் கொண்டு புவியை முத்தமிட்டதாலோ...
வெக்கம் கொண்டு இடி சத்தமிட்டு
மின்னல் கண் சிமிட்டியது...
காட்டு முல்லை கட்டியணைக்க காத்திருக்கிறது கரம் நீட்டி...
முத்தத்தின் முனைப்பில் புல் சிலிர்க்க
பூக்கள் அவிழ்ந்தன...
தவளைகள் தத்தம் தாளங்களிட
நண்டும் நந்தையும் மண் திறக்கும்...
நீர் ஒலிக்கும் சிலம்புச்சத்தம்
நித்தம் நித்திரை கலைக்கும்...
உன் வருடல் பெற்று வாசம் நுகர்ந்ததும் உயிர்கள்
உன்னதம் பெறும்...
உனக்காக காக்கும் உயிருக்கு
வந்த வரை போதுமென்று
நீர் தெளித்து ஓடிவிடாதே...
நின்று நின் கார் குழலில் மறைத்து
நிறைய முத்த மழையை பொழிந்துவிடு...
...குமரேசன்குளித்தலை...