மகிழ்ச்சியே உன் மருமம் என்ன

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் உண்மையான மகிழ்ச்சி; மற்றவை மகிழ்ச்சியை போல் தோன்றும் அனுபவங்களே;
நம்மில் பலர் மகிழ்ச்சி என்ற அற்புதமான உணர்வை பல நேரங்களில் அனுபவிக்க தவறிவிடுகிறோம்; கவலை படும் போதெல்லாம் இழக்கிறோம் மகிழ்ச்சி; கோபம் கொள்ளும் போதெல்லாம் துறக்கிறோம் மகிழ்ச்சி;
அடுத்தவருடன் நம்மை ஒப்பிடுகையில் மறுக்கிறோம் மகிழ்ச்சி; பொறாமை கொள்ளும் போதெல்லாம் கோட்டை விடுகிறோம் மகிழ்ச்சி;
தூக்கம் தடை பட்டு அவதிப்படுகையில் ஓடிவிடும் மகிழ்ச்சி; துக்கம் அதிக அளவில் தாக்கினால் துவண்டு விடும் மகிழ்ச்சி;
உணவு உடை உறைவிடம் கிடைத்த பிறகும், மனம் வேறு விஷயங்களுக்காக புலம்புகையில், தவிக்கையில், வேறு எங்கோ சென்று ஒளிந்து கொள்ளும் மகிழ்ச்சி;
சுதந்திரமாக நினைத்த மாதிரி வாழ முடியவில்லை என்ற நிலையிலும் நம்மை அவ்வப்போது பிரிந்து விடும் மகிழ்ச்சி;
கூட்டி கழித்து பார்க்கையில் அதிர்ஷ்டம் தான் ஒருவரின் வாழ்க்கை வெற்றிக்கு காரணமாக இருக்கிறது;
அதிர்ஷ்டம் இருந்தால் பணம் கோடி இருப்பினும் அல்லது ஒருவர் தெருக் கோடியில் தவிப்பினும் மகிழ்ச்சி கிடைக்கும்;
இல்லையேல், எவ்வளவு கிடைத்தாலும் கிடைக்காமல் போய்விடும் நிம்மதி மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி;

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Oct-21, 6:21 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 864

மேலே