பேச படிக்க எழுத தாய்மொழி ஊரெல்லாம் சுற்ற வாய்மொழி

தமிழ் தெரிந்தால் இனிமையின் தாயுடன் இசைபட வாழலாம்!
தெலுங்கு புரிந்தால் சுந்தர மொழியினில் நனைந்து மகிழலாம்
மலையாளம் அறிந்தால் இயற்கையின் ஓசையை கேட்கலாம்
கன்னடா கற்றால் வெகுளி, பொறுமையை கற்று கொள்ளலாம்
மராட்டி வராட்டி வீரசிவாஜி போல விரட்டிபுரட்டி கத்துக்கலாம்
ஒரியா சரியா தெரிய பூரிக்கு சென்று பூரி கிழங்கு சாப்பிடணும்
குஜராத்தி மொழியை படிக்க, ஹிந்தி தெரிஞ்சா ரொம்ப சுலபம்
பஞ்சாபி பாஷை அப்படி இல்லை இப்படியும் இல்லை , எப்படி?
ராஜஸ்தானி வேண்டாம், மார்வாரி தொழில் செய்வதை கவனி
தாய்மொழி அல்லாமல் நிச்சயமா ஒரு மொழியை அறியணும்
அது ஹிந்தி என்றால் நாட்டின் எந்த மூலையிலும் வாழலாம்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (22-Oct-21, 12:58 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 27

மேலே