சின்ன சின்ன சம்பவங்கள் உடையுது அம்பலங்கள்

சகோதர சகோதரிகளே, 2 வயது குழந்தை என்ன செய்திருக்கும்
இரண்டு உத்திரணி மண்ணெண்ணெய் எடுத்து குடித்திருக்கும்

12 வயது சிறுவன் அப்படி என்ன செயல் செய்திருக்க முடியும்
இரவு கருப்பு கண்ணாடியில் பாட்டிக்கு பயம் கொடுக்க முடியும்

14 வயது மாணவன் எந்த அளவுக்குதான் குறும்பு செய்ய முடியும்
கண்ணில் பட்டவர்க்கெல்லாம் ஒரு புனைபெயர் வைக்க முடியும்

16 வயது பையனொருவன் பள்ளி படிக்கையில் என்ன செய்வான்
வாடகை வீட்டிற்கு வந்த இளம் பெண்ணை காதலித்து இருப்பான்

18 வயது வாலிபன் அசட்டு தைரியத்துடன் நடந்து கொள்வது?
வரிசையை மீறி ரயில் டிக்கெட் வாங்குபவனை தட்டி கேட்பது
தட்டி கேட்டவனிடமிருந்து நன்றாக உதை வாங்கி கொள்வது

27 வயது இளவட்டம் தனிகாட்டில் என்னத்த செய்ய முடியும்
காட்டுக்கு வந்த ஒரு கன்னியை ரகசிய சைட் அடிக்க முடியும்

30 வயது தமிழ்மகன் உத்திரபிரதேசத்தில் என்ன சாதிக்க முடியும்
வீரதமிழ் தேசபக்தி பாடலை ஹிந்தி மக்களுக்கு முன் பாடமுடியும்

மேற்கூறிய ஒவ்வொன்றும் ஒருவர் வாழ்வில் நடப்பது சாத்தியமே
இவை எல்லாம் என்வாழ்வில்தான் நடந்தது இது சத்தியம் சத்தியமே

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Oct-21, 10:22 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 191

மேலே