நகைச்சுவை துணுக்குகள் 37
அவன் ஓட்டிக் கொண்டு வந்த காரை டிராபிக் போலீஸ்காரர் நிறுத்தினார்,
ஓட்டுநர்: எதுக்காக நிறுத்தினீங்க?
போலீஸ்: ஸ்பீட் லிமிட் 60 Kmh ஐத்த்தாண்டி ஓட்டி இருக்கீங்க.
ஓட்டுனர்: நான் 60ஐத் தாண்டலையே
அவர்மனைவி; இல்லே, இல்லே, நீங்க 80 லே ஓட்டினீங்க
போலீஸ்: உங்க காரோட டெயில் லைட் உடஞ்சி இருக்கு. வேலை செய்யல்லே
ஓட்டுனர்: அப்படியா? எனக்குத்தெரியாதே
அவர் மனைவி: நான் ஒரு வாரமா சொல்லிக்கிட்டு இருக்கேன். காதுலேயே போட்டுக்காம இருந்தா எப்படி?
போலீஸ்: சீட் பெல்ட் போட்டுக்காம ஓட்டி இருக்கீங்க.
ஓட்டுனர்: நீங்க காரை நிறுத்தச்சொன்னவுடனே நீங்க என் பக்கம் வரும்போது தான் சீட்பெல்டைக்கழட்டினேன். அது வரையிலும் போட்டுக்கிட்டுதான் இருந்தேன்
அவர் மனைவி: நீங்க எவ்வளவுவ சொன்னாலும் எப்பவுமே சீட் பெல்ட் போட்டுக்கிறதே இல்லை
ஓட்டுனர்: ( மனைவியைப்பர்த்து கோபத்துடன்) ஷட் அப். உன் ஊத்த வாயைத்திறக்காதே
அறிவு கெட்டவளே
போலீஸ்: என்ன அம்மா, இவர் இப்படித்தான் உங்க கிட்டே பேசுவாரா எப்பவுமே?
அவர் மனைவி: எப்போதும் பேசமாட்டார். குடிச்சிட்டு கார் ஓட்டறப்போ மட்டும்தான் இந்த மாதிரி பேசுவார்.
**************************
*என்னுடைய உடம்பை நான் இறந்த பிறகு ஒரு மெடிகல் காலேஜுக்கு தானம் பண்ணப்போறேன்.
அப்படியா? நல்ல காரியம். உனக்கு எப்படி இந்த மாதிரி எண்ணம் வந்தது?
என் அப்பாவோட ஆசையே அதுதான். என்னை எப்படியாவது மெடிகல்காலேஜுலே சேர்க்கணும்னு ஆசைப்பட்டார்,
*****************************
*இந்த அண்டத்துலே கோடிக் கணக்குலே நட்சத்திரங்கள் இருககுன்னு சொன்னா நம்புறீங்க. ஆனா இங்கே இருக்கிற பெஞ்ச்லே உட்காராதீங்க. அதுக்கு இப்பத்தான் பெயிண்ட் அடிச்சி இருக்கோம்னு எழுதியிருந்தா, அதை நம்பாம, அந்த பெஞ்சை கையாலெ தொட்டுப்பார்ககறீங்க.
**************
*கணவன்: என்ன இன்னுமா ரெடி ஆகல்லே
மனைவி: நான் தான் 10 நிமிஷத்துலே புறப்படுறேன்னு அரை மணி நேரமா சொல்லி் கத்திக்கிட்டு இருக்கேன் இல்லே. நீங்க ஏன் ஒரு மணி நேரமா விடாம கத்தி தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கீங்க?