நகைச்சுவை துணுக்குகள் 38

அவன்: காணாமற்போன உங்க கார் பேர் என்ன?
அவள்: பேர் ஞாபகம் இல்லை ஆனால் அது T .யில் ஸ்டார்ட் ஆகும்
அவன்: அட டா, வெறும் டீயிலே ஸ்டார்ட் ஆற நல்ல காரை பெட்ரோல் இந்த விலை விக்கிற நேரத்துலே போய் தொலைச்சுட்டீங்களே.
***************
*அவன் அந்த கம்பனியில் வேலைக்கு சேர்ந்த அன்று கம்பனி மானேஜரை சந்திக்கிறான்
அவன் : சார், உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?
மானேஜர்: கேளு.
அவன்: என்னைத்தேர்ந்தெடுத்த இண்டர்வ்யூவில் நீங்கள் 9x 17 எவ்வளவு என்று என்னைக் கேட்ட போது, நான் தவறாக 156 என்று சொல்லியும் எப்படி என்னை செலக்ட் செய்தீர்கள்?
மானேஜர்: அன்று மொத்தும் 47 பேர் அந்த வேலைக்கான இண்டர்வ்யூ வுக்கு வந்தார்கள். நான் இதே கேள்வியை அத்தனை பேரிடமும் தனித்தனியாக கேட்டபோது எல்லோரும் தவறான விடையே தந்தார்கள். அப்படி வந்த விடைகளில் உன் விடைதான் சரியான விடைக்கு மிக அருகில் ( closest to the right answer) இருந்தது. அதனால்தான் நீ தேர்ந்தெடுக்கப்பட்டாய்.
*********************
*டாக்டர், ரெண்டு வாரமா கழுதைகள் கால்பந்து விளையாடற மாதிரி கனவு வந்துகிட்டே இருக்கு.
சரி, இந்த மாத்திரையை படுக்கப்போகும்முன் சாப்பிடு. சரியாகிவிடும்்
சரி, டாக்டர் , நான் இதை நாளைக்கு சாப்பிடறேனே.
ஏன் டிலே பண்ணறே. இன்னிக்கே சாப்பிடு
இல்லை டாக்டர், இன்னிக்குத்தான் அந்த கால்பந்து மாட்ச்சோட ஃபைனல்ஸ்
************************
*கணவன் டாக்டரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவள் வெளியில் காத்துக்கொண்டு இருந்தாள். வெளியே வந்த கணவன் அழுதுகொண்டே வந்தான்
மனைவி: ஏன், என்ன ஆச்சு?
கணவன்: ஒரு நாளைக்கு ஒன்று வீதம் என் ஆயுசு பூராவும் அவர் கொடுத்த மாத்திரைகளை சாப்பிடச்சொல்லி கொடுத்து இருக்கிறார்,
மனைவி: அதில் என்ன இருக்கிறது? இதற்காகவா அழுகிறீர்கள்?
கணவன்: அவர் கொடுத்த மாத்திரைகள் மூணே மூணுதான்

எழுதியவர் : ரா. குருசுவாமி (31-Oct-21, 7:21 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே