பொற்கிழி பாவலர்இராகுவின் எண்ணங்கள்
இயற்க்கை நிலையில் எழுந்த ஒன்று
இயைந்த மகிழ்வில் இன்பம் நிறைந்து
மலர்ந்த மொழியில் தலையாய் நிற்பது
மனதில் விளைவில் மாண்பு பெற்றது
சிந்தனை செய்தால் வந்தனை செய்வோம்
நிந்தனை செய்தால் வந்தனை செய்வோம்
வந்தனை செய்யும் வாழ்வின் பெரும்விழா
உண்ணம் உணவுக்கு உயர்வை தந்திடும்
கண்ணின் மணியாய் கலந்து வருவது
தமிழர் வழியில் நான்றின் பெருக்கில்
தமிழர் பண்பில் தாழ்ந்து இருப்பது
மொழியோடு நம்மில் விழியாய் இருந்து
இழையோடு வந்திடும் இனிய விழாவாம்
கதிரவன் ஒளியில் கதிர்கள் கண்டு
மதியை வளர்க்கும் நிதியை கொடுத்திடும்
தோழனாய் இருந்து துயர்களை கலைந்து
துணையாய் நின்றிடும் உழவு உயிரங்கள்
காளைகள் உழைப்பை கண்ணில் நிறுத்தி
உளவு மனத்தில் உயர்ந்து போற்றி
விளைவால் பிறந்த உண்ணம் பொருளை
புதிய பானையில் புத்தரசி இட்டு
பாலும் சர்க்கரை புகுந்து கலந்து
தோழனாய் இருந்து துயர்களை கலைந்து
துணையாய் நின்றிடும் உழவு உயிரங்கள்
காளைகள் உழைப்பை கண்ணில் நிறுத்தி
உளவு மனத்தில் உயர்ந்து போற்றி
விளைவால் பிறந்த உண்ணம் பொருளை
புதிய பானையில் புத்தரசி இட்டு
பாலும் சர்க்கரை புகுந்து கலந்து
அணலில் ஏற்றி அன்பில் மகிழ்வாய்
பொங்கி வந்திடு பொழுதில் நம்மின்
பொங்கிடும் உள்ளம் மகிழ்வில் உரக்க
பொங்கலோ பொங்குக பொங்கலோ பொங்குக!
பொங்குக உள்ளம் ! பொங்கி வழிந்திடும்
தமிழ் வாழ்வே பொங்குக பொங்கவே!
சத்தான பொங்கலிமே மகிழ்ச்சி தோன்றி
சளைக்காத தமிழுணர்வு சாற்றி பெருகும்
வித்தாரும் உணர்வெல்லாம் விளைவு கண்டு
வேற்றுலகில் தன்னைப்போல் உயர்ந்து நிற்குதம!