நிலவும் நானும்
என் கருவிழிகளின்
குளுமையான
வெண்பஞ்சு
இருளில் என்னை
பின் தொடரும்
உற்ற நண்பன்
சாளரம் வழியே
நான் இரசிக்கும்
வெண்பனி காதலன்
மொட்டை மாடியில்
என்னுடன் உலாவும்
தனிமை காவலன்
இரவின் மடியில்
இளைப்பாறும்
தருணங்களில்
எனக்கும் அவனுக்கும்
இடையேயான உரையாடல்
மௌன மொழியாகவே
தொடரும்.....