காற்றுக்கு தடை
காற்றுக்கு தடை போட
யாராலும் முடியாது என்பதை
நாம் எல்லோரும்
நன்கு அறிந்த உண்மை ...!!
ஆனால்
காதலர்களோ
கட்டி அணைத்துக்கொண்டு
தங்களுக்கு நடுவில்
காற்று நுழையாமல் இருக்க
தடை விதித்து விடுகிறார்கள் ...!!
காற்றும் இதனை
தடையாக எண்ணாமல்
இங்கிதம் புரிந்து
காதலர்களுக்கு
இடையே புகாமல்
விலகியே செல்லுகிறது
என்பது நான் அறிந்த உண்மை ...!!
--கோவை சுபா