எண்ணெய் சீயக்காய் இரும்பென
நிலைமண்டில ஆசிரியப்பா
மண்ணிலே முளைத்த செடியில் காய்த்த
பஞ்சும் மண்ணிலே விழுந்திடின் அழுக்காகும்
பூமியிலே வெளிவரும் குளிர்நீர் தேங்கியே
நமதின் தேகத்தில் விழுந்தழுக்கை அகற்றுமே --- (1)
பற்பல சுவைகளில் பதார்த்தங்களை உருவாக்கி
மண்ணே உயிர்களை மிடுக்காய் வைக்கிறது
மண்ணை மாற்றியே மகத்தான கலைகள்
மண்ணில் மிளிர்கின்றன அழகின் உருவாகவே --- (2)
எண்ணெய் சீயக்காய் இரும்பென கரும்பென
எதனையும் மிகுதியில் அதிமாய் தந்ததே
தாயினும் மேன்மையாய் பிறந்த யாவருக்கும்
பயிராய் மழையாய் காற்றாய் பலவகையாய் --- (3)
உருமாறியே உணவென தினமும் வாழ்ந்திடும்
மண்ணினும் சிறந்த கோளில்லை பால்வெளியில்
கண்ணிலும் மென்மையாய் காத்திட வேண்டுமே
நிலத்தின் பொடிபொடி துகளையும் உயிராய் --- (4)
தானாகவே சுழன்றதாய் குளிர்வென அனலென
உயிர்களின் உரியதின் உணர்வைத் தந்திடும்
கோளவுரு புவியினை நாளும் தொழுது
மேன்மை அடைந்து வரலாறு படைப்போமே --- (5)
----- நன்னாடன்.