முள்ளின் வருத்தம்

ரோஜா இதழ் போன்ற
மென்மையான
உன் விரல்களால்
ரோஜா பூவை
நீ பறிக்கும் போது...!!

ரோஜா செடியின் முள்
உந்தன் விரல்களை
குத்தி காயப்படுத்தி
விட்டோமேயென்று
வருத்தம் கொண்டதாம் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Oct-21, 11:52 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mullin varuththam
பார்வை : 177

மேலே