கழுதைப்பால் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கழுதைப்பால் வாதங் கரப்பான் விரணந்
தழுதளையுள் வித்திரதித் தானே - எழுகின்ற
ஒட்டியபுண் சீழ்மேக மோடு சொறிசிரங்கு
கட்டியிவை போக்கும் கழறு

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)

க’ர்’த்தவத்தின் பாற்குக் கரிய கிரந்தியறுஞ்
சித்தப் பிரமைபித்தந் தீருங்காண் - தத்திவரும்
ஐய மொழியு மதிக மதுரமுமாஞ்
செய்ய மடமயிலே செப்பு

- பதார்த்த குண சிந்தாமணி

மிகவும் இனிப்பான கழுதைப்பால் வாத நோய், கரப்பான், புண், தழுதளைநோய், கட்டி, கிரந்தி, கீழ்பிரமேகம், சொறி, சிரங்கு, அற்புதரணம், புத்திமாற்றம், பித்த தோடம், கபநோய்களைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-21, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே