எங்கள் பறை

பறை பறை
நாடி நரம்பை
துடிக்க வைக்கும் எங்கள் பறை

ஆதி குடியே
அன்றும் இன்றும்
அதிரும் எங்கள் பறை

நொலங்கு முதல்
நெற்றி போட்டு
இடும் வரை எங்கள் பறை

பட்டி தொட்டி எங்கும்
தமுக்கும் தளமும்
இடுவது எங்கள் பறை

ஏளம் போடுவதில்
எட்டு திசைக்கும்
ஒளிக்கும் எங்கள் பறை

பறை பறை
நாடி நரம்பை
துடிக்க வைக்கும் எங்கள் பறை

தேடி வந்தவரை
வரவேர்க்கும்
எங்கள் பறை

ஆடி பாடி
குத்தாட
எங்கள் பறை

அந்த ஆண்டவனையும்
அடிமை படுத்துமாட
எங்கள் பறை

எழுதியவர் : (2-Nov-21, 8:08 pm)
Tanglish : engal parai
பார்வை : 48

மேலே