கைபேசி

விலை கொடுத்து
வாங்கினாலும்...!!!
என் அங்கத்தின்
ஒரு பகுதியாக ஆனது
இந்த கைபேசி...!!!

என் சுக துக்கங்களை
கண்டு என்னுடனே பயணிக்கிறது...!!!
உயிரற்ற வெறும்
பொருள் தான் இந்த கைபேசி...!!!

சிரிக்கும் மனிதர்கள் இடையே
என்னை சிந்திக்க வைத்தது...!!!
என் ஆளுமையை
அதற்கு அடிமையாக்கியது...!!!

என் வாழ்க்கையின் தூரத்தை விட
கைபேசியில் நான் வாழ்ந்த தூரமே அதிகம்...!!!

எழுதியவர் : (11-Nov-21, 4:51 pm)
Tanglish : kaipesi
பார்வை : 103

மேலே