இருள்

இருள் என்பது, வெளிச்சம் இல்லாமை

எல்லா நாளும் சமமாக இருக்கும்

இருள் என்பது, கருப்புப் பணம் மறப்பது போல்

என்நாளும் ஓயாமல் மனதில் தீமையைச் செய்தலுக்கும்

இருள் என்பது, அம்மாவசை என்பது..

எல்லா தீமைகளையும் வளர்ந்து விடும்

இருள் என்பது, கருப்பு சட்டங்கள் போன்றது

மனிதனின் விளங்காமல் ஒரே மட்டமாய் இருக்கும்

இருள் என்பது, விளையாத நிலம் போல்.

விளைச்சல் இல்லாத நிலம் பாலைவனம் போன்றது

இருள் என்பது, மடமை போன்றது

மனிதனிடத்தில் கலவை மனம் மறைந்து இருக்கும்

இருள் மனிதனின் அமைதியும் காக்கும் அதனை மதித்து

அதனைக் கொண்டது இன்பமானது

இருள் என்பது, கல்லாமை,பொறாமை அறியாமை

தீண்டாமை மனிதனில் வளர்வது

ஆகையால் மனம் திருந்தி மலர்ந்து

மெய்யுலத்தில் நிலையாய் வாழுவதற்கும் பொறுமை கண்டு

இருளால் மானிடன் முழுகிட வேண்டாம்!

இருள் வேண்டும் அதைப் பயன்படுத்தும் முறைவேண்டும்

அனைவரும் இருள் நீக்கி, வாழ்வில் வளமை நிலைபெறவேண்டும்

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிசந்திரன் (13-Nov-21, 2:32 pm)
Tanglish : irul
பார்வை : 120

மேலே