மன பாரத்தை குறைக்கும் நெஞ்ச குமுறல்

இளமை பருவம் இனிமை இல்லாமல் போனதால் சோகம்
பள்ளி பருவத்தில் கூர்மை இல்லாது போனதால் சோகம்
வாலிப பருவத்தில் ஆசைகள் கனவுகள் ஆனதால் சோகம்
பணி புரியும் பருவத்தில் சிறப்பாக செய்யாததால் சோகம்

பாடும் மனமிருந்து துணிவு திறமை இல்லாததால் சோகம்
புனைந்த கவிதை வாழ்த்துக்களுக்கு ஊக்கமின்றி சோகம்
தாம்பதிய உறவில் நிறையுடன் குறையும் இருந்து சோகம்
குடும்ப வாழ்வு இன்பமே ஆனாலும் ஏதோ ஒரு சில சோகம்

பணியிலிருந்து ஒய்வு பெற்று மகிழ்ச்சி கொண்டும் சோகம்
தியானம், தர்மங்கள் செய்திடினும் மனதில் ஏதோ சோகம்
நண்பர்கள் ஒருவரும் பிரியமானவர் இல்லை என்ற சோகம்
விஞ்ஞானம் வளர்ந்தும், மெய்ஞானம் தேய்வதால் சோகம்

நல்ல முயற்சிகள் செய்தும் உடலில் ஏதோ ஒரு கோளாறு
எத்துணை தியானங்கள் செய்தும் மனதில் ஏனோ தகராறு
இவ்வளவு அனுபவங்கள் பட்டும், மனம் தெளியவில்லை
எவ்வளவு ஒழுக்கமுடன் இருப்பினும் ஏனோ சுகமில்லை

கதைகளாக எழுத எவ்வளவோ அனுபவங்கள் என் வாழ்வில்
ஆனால் கவிதை மூலமும் ஆதங்கத்தை வெளிப்படுத்தலாம்
இவ்வளவு குறைகள் இருப்பினும் நிறைகளும் உள்ளதுதான்
அவசியம் நிறை இருக்கிறது என்பதால் தானே இந்த கவிதை

நானும் ஒரு சாதாரண மனிதன், குறைகளை நிறை செய்வதில்
நீங்களும் சராசரி வாசகர்கள்தானே கவிதை தேர்வு செய்வதில்
நரை விழுந்தும் கரை சேர்ந்தும் வாழ்கை திரை போடவில்லை
திரை போடும்வரை மனத்திரையை நான் மூடுவதும் இல்லை!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (18-Nov-21, 1:38 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 112

மேலே