இன்றைய பெண்
இன்றைய பெண்ணைத் தப்புக்கு கணக்குபோடதீர்
அன்றுபோல் இன்றும் இவள் சமூகக்
கட்டுப்பாடுகளை மதிப்பவளே ஆனால் ஒன்று
இவள் ஒருபோதும் தன் சுதந்திரத்தைத்
துறப்பவள் அள்ளல் அதைக் காத்திட
இவள் பாரதி பெண்ணாய் கொதித்து
எழுந்திடவும் தயாராய் இருப்பவள்
இவளுக்கும் அச்சம் நாணம் பயிர்ப்பு உண்டு
வீரமும் உண்டு இன்று இவளிடம்
தனியொரு பெண்ணிற்கு அநியாயம் ஏற்படின்
அதைத் தனித்தோ கூடியோ எதிர்த்திட
ஒருபோதும் இவள் கூண்டுக்கு கிளியாய்
வாழ்ந்திட மாட்டாள் உயிர்ப்பு போயினும்
அதனால் நடை உடை பாவனைக்கொண்டு
இன்றைய பெண்ணைத் தப்பு கணக்கு
போடவேண்டாம் சமூகமே அவளை
மதித்து வாழ வலி செய்யுங்கள் .