இந்திய பகலும் அமெரிக்க பகலும்

விசாலி... கிருஷ்ணா...

அற்புத மணமக்களுக்கு

அன்பான திருமண வாழ்த்துகள்...


இருபத்தொன்று பதினொன்று

இருபத்தொன்று இனிய நாளிதில்

இந்திய பகலும் அமெரிக்க பகலும்

ஆனந்தம் கொள்கின்றன... உங்களின்

திருமணம் தரும் சுகந்தங்களில்...


அன்பின் ராஜாங்கம் அழகுடன் நடக்கும்

இதயங்களின் சாம்ராஜ்யத்தில்

இனிய மணமக்களே... நீங்கள்

இனிதே வாழ்க... இன்பமாய் வாழ்க...


வசந்தங்களின் வரவேற்பில்

வளங்கள் நிறைவாய்ப் பெற்று... 

பார்போற்ற வாழ்க...

பல்லாண்டு வாழ்க...


பியூட்டிபுல் இந்தியா

ஜாய்புல் சிங்கப்பூர்...

கலர்புல் அமெரிக்கா...

நீங்கள் பார்த்து வளர்ந்தீர்கள்...

சியர்புல் இதயங்கள் கொண்டு

சிகரம் தொட உயர்வீர்கள்...


கம்பனின் சிந்தனை தாண்டிய

காதலால் கசிந்துருகி

இல்லறம் நல்லறமாய்க் காணும்

வசந்த உணர்வுகளில்... உலகம் 

என்றும் உங்களுக்கு

புதியதாய்த் தோன்றும்...


கைகோர்க்கும் நாள் இதில்

பூமியில் பூக்கும் பூக்கள்

எல்லாம் உங்களுக்காகவே...

மலரும் பூக்களின் நறுமணம்

நந்தவன மனங்களில் என்றும்

நிறைந்து வழியும்...


இனிய மணமக்களே...

அழகிய புரிதலும்... 

அன்பின் பரிமாறலும்... 

சம்பாஷணை சங்கீதமும்... 

மா பலா வாழை 

கற்கண்டு... தேனின்

சுவையினும் இனிக்கும்...


இல்லறப் பூங்காவில் 

உலா வரப்போகும்

உல்லாசப் பறவைகளே!


முதலானதை முதலாய்ச் செய்து...

முடிவினை மனதில் வைத்த 

ஆரம்பம் கொண்டு..

செயல்களை சிறப்பாய்ச் செய்து..


புரிந்தபின் புரியவைத்து...

ஜெயிக்கவிட்டு ஜெயித்து...

ஒன்றுபட்டு உழைத்தால் 

பத்தும் பத்தும் இருபதல்ல

அதற்கும் மேல் என்பதறிந்து...


வெற்றிப் பயண வியூகங்களைப்

புதுப்பித்துக் கொண்டு... 

இந்த ஏழு ஸ்வரங்களின் 

இனிய ராகங்களில்...

வழிகளும் வசந்தங்களும் வசப்படட்டும்..


கார்த்திகை தீபங்களின் வெளிச்சத்தில்

கண்கள் நிறைய ஒளிமயம்...

கார்த்திகேயன் வடிவேலனின் அருளில்

வாழ்வில் என்றும் இன்பமயம்...


செல்வங்கள் யாவும் பெற்று

சீரோடும் சிறப்போடும்.. 

என்றென்றும் மகிழ்ந்து வாழ்ந்திருக்க...

விசாலி... கிருஷ்ணாவிற்கு

இனிய திருமண வாழ்த்துகள்...

அன்புடன்...

ஆர்.சுந்தரராஜன்

👍👏🍫💐🌹🎂😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (22-Nov-21, 12:11 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 121

மேலே