நண்ப
எவ்வளவு தூரம் நடந்தாலும்
உன்னுடன் நடை பயணத்தின்
போது மட்டும் என் கால்களுக்கு
வலி தெரிவதே இல்லை
நண்ப
நான் ஓராயிரம்
தொல்லை கொடுத்தாலும்
சிறிதும் முகம் சுழிக்காமல்
அன்னை போல் என்னை
காத்தவன் நீயடா
ஆருயிர் நண்ப
அடி தளம் போடுகிறேன்
உன் உயிர் உடலை விட்டு
அறுந்து போனாலும்
நீ இருப்பாய் என் உயிராக