நிலத்துளசி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(‘ர்’ இடையின ஆசு)
நிலத்துளசி மாத(ர்)தரு நின்முலைப்பால் மந்தம்
வலுத்தசுரம் பித்தகண மாற்றும் - அலத்துகண
மாந்தசுரம் பித்தசுரம் மாபெரிய சீதசுரஞ்
சே’ர்’ந்தோடச் செய்யுந் தெளி
- பதார்த்த குண சிந்தாமணி
குழந்தைகளுக்கு தாய்ப்பாலால் ஏற்படுகிற மந்தம், வாதசுரம், பித்த நோய்கள், கணச்சூடு, மாந்தசுரம், குளிர்சுரம் இவை நிலத்துளசியினால் நீங்கும்