கருந்துளசி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

இருமலொடு நெஞ்சில் இழுப்புச்சு வாசங்
கிருமி சலதோஷங் கேவல் - மருமச்
சளிரூட்சை சூலைவிஷஞ் சந்நியிவை போக்குந்
தளிரார் கருந்துளசி தான்

- பதார்த்த குண சிந்தாமணி

இத்துளசி இருமல், நெஞ்சிழுப்பு, இரைப்பு, கிருமி, நீர்க்கோவை, கேவல், மார்புச்சளி, சுரம், குத்தல், விடம், சன்னி போன்ற அனைத்தையும் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Nov-21, 12:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே